மறுபடியும் முதல்ல இருந்தா ஆள விடுங்க! பிக்பாஸ் அல்டிமேட் டை தட்டிக் கழித்த முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது கடந்த 5 சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறது. தற்சமயம் அதன் இன்னொரு புது முயற்சியாக 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக கூடிய பிக்பாஸ் அல்டிமேட் வரும் 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆகவே எதிர்வரும் 30ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடந்து முடிந்த 5 சீசன்கள் இல் இடம்பெற்ற போட்டியாளர்கள் பங்கேற்று கொள்ள இருக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் யார், யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது தொடர்பாக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்ற ஜூலி, சினேகன், உள்ளிட்ட இருவரும் உறுதியான சூழ்நிலையில், ஓவியா ரசிகர்களின் பிடித்தமான போட்டியாளர் என்ற காரணத்தால், அவரும் இதில் பங்கேற்று கொள்ள தயாராகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு பிக்பாஸ் 1வது சீசனில் டைட்டில் பின்னரான ஆரவ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ள வேண்டும் என்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இதற்கு அவரோ மீண்டும் பிக்பாஸ் வேண்டவே வேண்டாம் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன் எனக்கு தற்போது தான் திருமணம் ஆகி இருக்கிறது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது, என்னை விட்டுவிடுங்கள் என்று தட்டிக்கழித்து விட்டாராமஆரவ்.