மத்திய மாநில அரசுகளால் சித்த மருந்து புறக்கணிப்பு;உயர்நீதிமன்றம் கண்டனம்?

Photo of author

By Pavithra

ஆரம்ப கட்டத்தில் இருந்தே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அவர் முறையாக சித்த மருத்துவம் பயிலவில்லை இதுபோன்று பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதுவரை கண்டுபிடித்த சித்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தால் தற்போது பயன்பாட்டில் இருத்திருக்கும் ஆனால்
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கணிப்பது ஏன்?

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?

இதுவரை எத்தனை சித்த மருந்துகள் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? 

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்?

எத்தனை சித்த மருத்துவ ஆய்வகங்களில் போதுமான நிபுணர்கள் உள்ளனர்?

ஆயுர்வேதா சித்தா யுனானி போன்ற மருத்துவமுறைகளை புறக்கணிப்பது ஏன்?

இது போன்ற சரமாரியான கேள்விகளை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.இதற்கு வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.