BJP: நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் மாநிலங்களுக்கான சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே சமத்தில் நடத்த பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு தேர்தல்களையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடத்துவதால் தேர்தல் ஆணையத்திற்கு தேவையில்லாமல் நீதி விரையம் ஆகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் காலங்களில் அரசு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஆகிறது என பாஜக குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
இது போன்ற, காரணங்களை முன் நிறுத்தி நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது பாஜக அரசு. இது குறித்து சாதகம் மற்றும் பாதகங்களை தெரிந்து கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு பல மாதங்கள் இது தொடர்பாக ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
அதன் பின் இதற்கு ஒப்புதல் வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. இதற்கு முற்றிலும் தொடக்கத்தில் இருந்தே எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.
2029 ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல் படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.