தீபாவளிக்கு மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ்! இனி இவங்க மட்டும் கரண்ட் பில் கட்ட தேவையில்லை !

Photo of author

By Sakthi

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு  நலப்பணி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீபாவளியை முன்னிட்டு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளார். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு  200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதாகும். இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்ளவர்களின் மின்சார கட்டண சுமையை குறைத்து சுலபமாகும் வகையில் செயல்படுத்தப்படும்.

ஒரு குடும்பத்தின் மின் கட்டணம் 200 யூனிட்டுகளுக்கு இருக்குமானால் , அந்த மொத்த மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்பது தான்  இதன் சிறப்பு அம்சம் ஆகும். மேலும்  200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இது பொருந்தாது.  இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பினால் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

இப் பதிவுக்கு ஆதார் அட்டை, மின்சார பில், வருமானச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண்  முதலியவை தேவைப்படும் ஆவணங்கள் ஆகும். இத்திட்டமானது கர்நாடக மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்ததிட்டம்  தீபாவளியை  மேலும் இனிமையாக்கும் வகையில் அமைந்து உள்ளது.