ADMK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ் அழகிரி, வெற்றிபெற்றால் ஆட்சியிலும் பங்கெடுப்போம் என்று கூறினார். இவரை தொடர்ந்து விசிக கட்சியின் தலைவரான திருமாவளவன் தங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதிக்கியிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.
இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் பாமகவில் கட்சியை வலுபடுத்தும் நோக்கில் உள்ள ராமதாஸ் பாமக கட்சியின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்தை செப்டம்பர் 21 தைலாபுரம் தோட்டத்தில் கூட்டினர். இந்த முக்கிய கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கபட்டன.
கூட்டத்தில் வரவிருக்கு சட்டமன்ற தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் இணைந்தாலும் குறைந்தது 30 தொகுதிகளை பெற வேண்டும் என்ற ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம் தொகுதி ஒதுக்கிடு தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டுமென்றும் தங்களது வலிமையை கூட்டணி கட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
அதிமுக தரப்பு பாமகவிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகின. பாஜக அதிமுகவிடம் 30 சீட்டுகள் கேட்டிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அழுத்தத்தையும் அதிமுக எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாமகவிற்கு செல்லும் தேர்தல் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில் இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.