இன்று பூமிக்கு மிக அருகில் வரும் கோள்! வெறும் கண்களாலும் பார்க்கலாம்!

Photo of author

By Hasini

இன்று பூமிக்கு மிக அருகில் வரும் கோள்! வெறும் கண்களாலும் பார்க்கலாம்!

சூரிய குடும்பத்தில் சூரியனுடன் எட்டு கோள்கள் ஒன்றாக உள்ளன. அதை தான் நம் சூரிய குடும்பம் என்கிறோம். அந்த எட்டு கோள்களும் சூரியனை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன அது நாம் அறிந்த விஷயம் தான். இந்த நிகழ்வு எப்பொழுதும் நடப்பது தான். அந்த குடும்பத்தில் ஒரு கோளாக இருப்பது சனிக்கோள் ஆகும். இதை நிழல் கிரகம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த சனிக்கோள் ஒரு வருடம் 13 நாட்களுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் என்பது அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இன்று காலை 11.30 மணியளவில் சனியும், பூமியும் நெருக்கமாக இருக்கும் என்று ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் கூறியுள்ளார். மேலும் அவர் எங்கிருந்து பார்த்தாலும்  சனிக்கோளை பொதுமக்கள் காணலாம். இன்றிரவு நேரங்களில் கூட பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சாதாரணமாக பைனாகுலர் மூலம் பார்க்கும் போது சனிக்கோளின் வளையத்தை பார்க்கலாம் என்றும், நவீன தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது பூமிக்கும், சனிக்கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூட காண முடியும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வை வெறும் கண்களால் கூட பார்க்கலாம். அப்படி பார்க்கும்போது சனிக்கோள் விண்மீன் போல தெரியும். விண்மீன் விட்டு விட்டு ஒளிரும் தன்மை உடையது.

உற்றுப்பார்த்தால் விண்மீன் போல் விட்டுவிட்டு ஒளிராமல் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டு இருப்பது சனிக்கோள் என உறுதி செய்யலாம் என்றும் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு மிக அருகில் அதாவது 120 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அருகில் சனிக்கோள் இருப்பதால் நீங்களும் தவறாமல் பாருங்கள் கண்டுகளியுங்கள். இதே நிகழ்வு அடுத்த வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடக்கும் என்றும் அறிவியலாளர்கள் உறுதியாக கூறுகின்றனர்.