வெளிவரும் செங்கோட்டையனின் அட்டுழியம்.. தவெகவின் அழிவு ஆரம்பம்!! நடுங்கும் விஜய்!!

0
289
The coming out of the Sengottaiyan.. the beginning of the destruction of TVK !! Shaking Vijay!!
The coming out of the Sengottaiyan.. the beginning of the destruction of TVK !! Shaking Vijay!!

TVK: 2 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கபட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுகவின் தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றபட்ட சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கையை அனைவரும் எதிர் நோக்கி இருந்தனர். அப்போது தான் அவர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார்.

இவர் தவெகவில் இணைந்தது, விஜய்க்கு ஜாக்பாட் அடித்தது போல இருந்தாலும், மற்றொரு புறம் இது அவருக்கு பாதகமாவே அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இது அதிமுகவிலும் ஆரம்பித்துள்ளது. இதுவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் தோல்வியை பெற காரணமாக அமையும் எதிர்பார்க்கப்பட்டது. இது தவெகவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்பட்ட சமயத்தில், இந்த ஊழல் வழக்கு தற்போது தவெகவிலும் தலை தூக்கியுள்ளது. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் அவர் மீது சில குற்றசாட்டுகள் எழுந்துள்ளது

விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் போக்குவர்த்து துறை அமைச்சராக இருந்த போது, ரூ.2.6 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது போன்ற பல்வேறு வழக்குகள் அவர் தவெகவில் இணைந்த பிறகு மீண்டும் உயிர் பெற தொடங்கியுள்ளன. திமுகவின் ஊழல் புகாரை மட்டுமே மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வந்த விஜய்க்கு தற்போது அவரது கட்சியிலேயே இது போன்ற நிகழ்வு அரங்கேறி இருப்பது பெறும் அதிர்ச்சியையும், பயத்தையும் வரவழைத்து இருப்பதாக பலரும் கூறுகின்றனர். மேலும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கோபத்தில் இருக்கும் இபிஎஸ் அவருக்கு எதிரான சில ஆவணங்களையும் வெளியிட போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Previous articleகூட்டணி குறித்து உறுதி தெரிவித்த பிரேமலதா.. அதிருப்தியில் திராவிட கட்சிகள்!!
Next articleதிமுக கூட்டணியிலிருந்து விலகும் முதன்மை கட்சி.. ஆளுங்கட்சிக்கு முற்றுப்புள்ளி!!