402 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பரவல்! பீதியில் டெல்லி அரசியல் பிரமுகர்கள்!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது முதல் இரண்டு அலைகளை விடவும் தற்போது இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி கொண்டு உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து ௫௯ ஆயிரத்து 532 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகி இருக்கிறது, இது வரையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 28004காக இருக்கிறது.

அதோடு நாடு முழுவதும் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 623 ஆக அதிகரித்திருக்கிறது. முதல் இரண்டு அலைகளை விடவும் இந்த 3வது அலையில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 23 சதவிகிதம் அதிகமாக பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தொடுவதற்கு முதல் இரண்டு அலைகளுக்கு ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ தேவைப்பட்டது. இருந்தாலும் தற்போது ஒரே வாரத்தில் 100 லிருந்து 10 ஆயிரத்திற்கு தாவி இருக்கிறது நோய்த்தொற்று பரவல், இந்த நோய் தொற்று பரவலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவையில் கூட்டப்படவில்லை தமிழகத்தில் கூட்டத்தொடர் ஆரம்பித்தாலும் மூன்றே நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் மிக விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் 1409 ஊழியர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் இதுவரையில் 402 ஊழியர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு இவர்களுக்கு இருப்பது ஒமைக்ரான் நோய் தொற்றா? என கண்டறிவதற்காக இவர்களுடைய மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. மக்களவை ஊழியர்கள் 200 பேர், ராஜ்யசபா ஊழியர்கள் 69 பேர் இரு அவைகளிலும் பொதுவான ஊழியர்கள் 133 பேர் என ஒட்டுமொத்தமாக 402 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்தியானது டெல்லி அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.