BJP: திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்ற நோக்குடனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையாலும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்த பொழுது பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இது விஜய்க்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை பயன்படுத்தி பாஜக, விஜய்யுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் திமுக அரசின் சதி என்று கூறியுள்ளார். திமுக அரசில் எத்தனையோ இடங்களில், எத்தனையோ பேர் எதிர்பாராத விதமாக இறந்திருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் நேரில் செல்லாத ஸ்டாலின் இதற்கு மட்டும் எப்படி அரை மணி நேரத்தில் வந்தார் என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் விஜய்க்கு 10 கண்டனங்களை தெரிவித்திருந்தது. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை எனவும் கரூரில் ஏற்பட்டது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனை மையப்படுத்தி பேசிய நயினார் நாகேந்திரன் நீதிமன்றத்தையும் சாடியிருந்தார்.
தவறு செய்தவர்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் ஒன்றும் நீதிமன்றம் கிடையாது, அரசியல் கட்சி வைத்திருக்கிறோம் அவ்வளவுதான். நீதிமன்றம் சில நேர்மையான தீர்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவர் நீதிமன்றத்தை இவ்வாறு விமர்சித்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாதமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் தவறு செய்தவர்களை காப்பாற்றுகிறது என்று கூறிய கருத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தின் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது என்பதை இவர் வலியுறுத்தி கூறுவதாக தெரிகிறது. ஆளுங்கட்சி மீதான எதிர்மறையான மனநிலையையும், நீதிமன்றம் விஜய்க்கு விதித்த கண்டனங்களையும் அவர் சுட்டிக்காட்டி பேசியிருப்பது விஜய்யை பாஜக பாதுகாக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பலர் கூறுகின்றனர்.