
V.S.K: நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அது சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே, எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்தை கூறி வந்தார்.
ஆனால் தற்போது களத்தில் குதித்த அவர் 2 மிகப்பெரிய மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார். இதற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பேசிய விசிக கட்சியை சேர்ந்த மோசஸ் என்பவர் இது பொது நல அரசியல் என்றும், அரசியல் தலைவர் மக்கள் பிரச்சினைகளை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும்.
ஆனால், விஜய் தான் இருக்கும் இடத்தை நோக்கி மக்களை வர வைக்கிறார் என்றும் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் எண்ணுகிறார். விஜய்யின் மாநாடு மற்றும் பரப்புரைக்கு அதிக அளவில் கூட்டம் கூடுவதாக கூறுகின்றனர். ஆனால் அந்த கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது.
அது அவரின் ரசிகர்கள் கூட்டம் தானே தவிர, வாக்காளர்கள் கூட்டம் அல்ல என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன் வைத்தார். மேலும் பேசிய அவர் விஜய் அரசியலை பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர் தனது சினிமா முகத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுகிறார் அது நடக்காத காரியம் என்றும் கூறினார். நேரம் கிடைக்கும் போது மட்டுமே பேசக்கூடாது, அனைத்து நேரங்களிலும் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.