மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

0
309
The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!
The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டுக்கு சென்ற சத்தியமூர்த்தி கோவிலுக்கு போகலாம் வா என்று மனைவியை அழைத்து இருக்கிறார். கோவிலுக்கு தானே தனது கணவர் அழைக்கிறார் என்று திவ்யாவும் அவரை நம்பி அவருடன் சென்று இருக்கிறார்.

அப்போது போகும் வழியில் திவ்யாவுக்கு பால் வாங்கி குடிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த பாலில் ஏற்கனவே அவர் தூக்க மாத்திரையும் கலந்துள்ளார். ஆனால் இதை அறியாத அவரது மனைவி அந்த பாலை குடித்ததன் காரணமாக சிறிது நேரத்திலேயே மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். மயங்கிய நிலையில் இருந்த தன் மனைவியை எலவம்பட்டியில்  இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் தூக்கிச் சென்றார்.

அங்கே அவர் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மயக்கத்தில் இருந்தாலும் உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயின் காரணமாக திவ்யா அலறிக்கொண்டே அங்கும் இங்கும் ரோட்டில் ஓடி இருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் திவ்யாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது திவ்யா அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனினும் மனைவி தீப்பிடித்து எரியும் போது தப்பி ஓடிவிட்ட கணவன் தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன என்றும், அதனால் இனி எங்களால் வாழ முடியாது என்றும் அதன் காரணமாகவே மனைவியை கொன்று, தானும் தற்கொலை செய்யப் போகிறேன்.

என்னை எங்கும் தேட வேண்டாம் என்றும் தனது குடும்ப உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்துள்ளார். வீடியோவும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleதமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!
Next articleசிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here