பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி!

Photo of author

By Hasini

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி!

Hasini

The cruelty that happened to the 10 year old girl at the famous actor's farm house! Police action!

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி!

மைசூர் டவுன் டி.நரசிப்புரா சாலையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் கன்னட திரை உலகில் பிரபல நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இங்கு அவர் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அவரது ஆசையின் பெயரில் இவ்வாறு செய்து வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் எல்லாம் அந்த நடிகர் அங்கு ஓய்வு எடுப்பார் என்றும், குதிரை சவாரி செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் சொல்கின்றனர்.

அந்த பண்ணை வீட்டை பராமரிப்பதற்காகவும், தோட்டத்தை பராமரிப்பதற்கும் குதிரைகளை கவனித்துக் கொள்வதற்கும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கி தோட்ட வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது அவளுக்கு பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி பண்ணைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, குதிரை பராமரிப்பாளரான ஒரு நபர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசீம் என்பவர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அந்த குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் கூறி அந்த சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தான்.

இந்த நிலையில் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே அவர்கள் இது பற்றி மைசூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நசீம் மீது போக்கோ சட்டம் மற்றும் ஆள் கடத்தல் போன்ற வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை கோர்ட்டிலும் ஆஜர்படுத்தினர்.

மேலும் நசீமை கடந்த 15ஆம் தேதியே போலீசார் சிறையில் அடைத்துவிட்டனர். இருந்தபோதிலும் இந்த செய்திகள் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.