தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

0
240

இந்துக்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் தீபாவளி பண்டிகை விரைவில் வரவிருப்பதால் இதற்காக வெளியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட இருப்பதால் அன்று தினம் மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை வேலை நாளாக இருப்பதால் அந்த நாளில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் பயணம் செல்வோர் தீபாவளி நாளான திங்கள்கிழமை அன்று இரவு புறப்பட்டு வசிப்பிடங்களுக்கு மறுநாள் திரும்பி வந்து குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. ஆகவே தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Previous articleஅண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?
Next articleகுடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!