மதுபோதையில் நடந்த விபரீதத்தால் ஏற்பட்ட உயிர் பலி!

Photo of author

By Jeevitha

நாகர்கோவில்:மது போதையில் சகோதரர்கள் சண்டையிடும் போது  நடந்த சம்பவத்தால் ஒரு உயிர் பலியானது.

நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் பகுதியில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான்  சுபாஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் பெயர் சுந்தர். சுபாஷ் தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு .  தினமும் மது அருந்திவிட்டு தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில்  நேற்று அதிகாலை 2 மணிக்கு தனது  அம்மாவுடன் தகராறு செய்துள்ளார். இதை தடுக்க முயன்ற தனது மனைவிக்கும் அடி பலமாக விழுந்தது. மேலும் சுபாஷ் கையில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த தனது தம்பி  கத்தியால் ஏதாவது விபரீதம் வந்து விடும் என எண்ணி அதை பிடுங்க முயன்றுள்ளார். ஆனால் கத்தியை  தராமல் தனது தம்பியிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் கையில் வைத்திருந்த கத்தி அவரது இடதுபுற மார்புக்கு கீழ் பகுதியில் ஆழமாக குத்தியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கண்டு அவரது குடும்பத்தினர்  அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த நிலையில் அவரது தம்பியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.