1985 ஜூன் முதல் 1986 மார்ச் வரை மாநில முதல்வராக இருந்த
மகாராஷ்டிராவின்
முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் – க்கு
சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.89 வயதாகும் அவர் தற்போது உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
1985’ஆம் ஆண்டில் எம்.டி தேர்வு முடிவுகளில் மோசடி செய்யப்பட்டதாகக் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பம்பாய் உயர் நீதிமன்றம் அவருக்கு கடுமையான தண்டனைகள் விதித்தது.இதனால் 1986-க்கு பிறகு அவர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரது இறப்பு செய்தியை கேட்டு காங்கிரஸ் அமைப்பினர் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.