நிலச்சரிவினால் உயிரிழந்த தமிழர்களை ஒரே குழியில் புதைத்த அவலநிலை?பரிதவித்த உறவினர்கள்?

Photo of author

By Pavithra

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன.இந்த சம்பவத்தை அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால் தொடர் மழை காரணமாகவும் இருள் சூழ்ந்ததன் காரணமாகவும் மீட்பு பணி சற்று தாமதமானது.நேற்று முன்தினம் 17 பேர் சடலங்களாகவும், 16 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டது.மீண்டும் நேற்று நடந்த மீட்பு பணியில் மேலும் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.நேற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் அவ்வப்போது தாமதமாகி மேலும் இருள் சூழ்ந்ததால் மாலை 6 மணி வரை மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

மீட்கப்பட்டவர்களில் உடல் சிதைந்த நிலையில் இருந்ததால்,உயிரிழந்த 27 பேரில் 23 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.மீதம் 4 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் சடலத்தை சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து,இறந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்களுக்கு தராமல்,தேயிலை தோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒரே குழிதோண்டி அனைவரின் உடலும் புதைக்கப்பட்டது.இதனைக் குறித்து நிபுணர்களிடம் கேட்ட போது கொரோனா அச்சத்தினால் இறந்தவர்களின் உடலை ஒரே குழியில் புதைக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்தநிலையில் பலியானவர்களின் உறவினர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.