1. ஜனவரி மாதம்:
ஜனவரி மாதம் என்பது விநாயகரின் அம்சம் பொருந்திய மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை என்பது அதிகமாக இருக்கும். தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்கள்.
எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதே சமயம் மற்றவர்களையும் சுதந்திரமாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
2. பிப்ரவரி மாதம்:
பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் குபேரனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு அதிகம் உள்ளவர்களாகவும், மிகவும் பண்பானவர்களாகவும் இருப்பார்கள். உணர்வு பூர்வமானவர்களாக இருப்பார்கள். அன்பை தேடி அலைபவர்கள். அன்பை காட்டுப்பவர்களிடம் அடிமையாகவே இருப்பார்கள்.
அதிர்ஷ்டசாலியாகவும், உயர்ந்த மேன்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நகைச் சுவையானவர், அறிவு மிகுந்தவர், சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்.
3. மார்ச் மாதம்:
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முருகனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். வேகம், கருணை, விவேகம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். குறும்புத்தனம் மற்றும் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.
4. ஏப்ரல் மாதம்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நாரதரின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேச்சு திறமை அதிகமாக இருக்கும். அக்கறை மற்றும் வலிமையானவர்கள். பிடிவாத தன்மை கொண்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் கட்டளை போடும் இடத்தில் இருப்பார்கள். புத்திக் கூர்மை மிக்கவர்கள், எதையும் புதிதாக யோசிப்பார்கள்.
5. மே மாதம்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். கருணை, மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை நீங்கள் இருக்கும் இடத்தில் நிறைந்து இருக்கும். காதல் மற்றும் எதார்த்தமான எண்ணம் உடையவர்கள். கலகலப்பாக இருக்கும் குணம் கொண்டவர்கள். எதில் கை வைத்தாலும் அதில் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள்.
6. ஜூன் மாதம்:
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கக்கூடிய இடத்தில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் காதல் உணர்வு மற்றும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்கள். ரொம்ப தைரியமானவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு தான், எதிலும் உணர்ச்சி வசப்படுவார்கள்.
7. ஜூலை மாதம்:
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். வசீகரத்தன்மையும், ஆளுமை தன்மையும் அதிகமாக இருக்கும். இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ரகசியமானவர்கள், அமைதியான குணம் கொண்டவர்கள். உழைப்புக்கு சொந்தக்காரர்கள். நேர்மையாக இருக்க விரும்புவார்கள்.
மற்றவர்களின் உணர்வுகளை மிகவும் மதிப்பார்கள். மற்றவர்கள் செய்யும் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். பழிவாங்கும் குணம் அற்றவர்கள்.
8. ஆகஸ்ட் மாதம்:
இவர்கள் துர்க்கை அம்மனின் அம்சம் கொண்டவர்கள். இவர்களிடம் பயம் என்பதே இருக்காது, எதையும் துணிச்சலுடன் செய்வார்கள். கடின உழைப்பாளி, சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கையில் தைரியமான முடிவுகளை எடுப்பார்கள்.
தன்னை சுற்றி இருப்பவர்களை குறித்த அக்கறை கொண்டவர்கள். தான் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். எதையும் புதுவிதமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள்.
9. செப்டம்பர் மாதம்:
இவர்கள் அனுமனின் அம்சம் கொண்டவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும், விசுவாசத்திற்கும் உரியவர்களாக இருப்பார்கள். ஆளுகைக்கு உட்பட்டவர்கள். புத்தி கூர்மை மிக்கவர்கள். விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டவே விரும்புவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
10. அக்டோபர் மாதம்:
இவர்கள் விஷ்ணுவின் அம்சம் கொண்டவர்கள். அன்பு, பாசம், காதல் இவர்களிடம் அதிகம் இருக்கும். புதுமை துவமும், நட்பாக பழகும் எண்ணம் கொண்டவர்கள். எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என நினைத்து விட்டால் அடைந்தே தீருவார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவதை இவர்களது குறை.
பிறரை பழி தீர்ப்பது, வஞ்சிப்பது இவர்களது பிறந்த குணம். இவர்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் புகழ்பெற்ற தலைவராக இருப்பார்கள்.
11. நவம்பர் மாதம்:
இவர்கள் குபேரரின் அம்சம் கொண்டவர்கள். தனிமையையும், அமைதியையும் விரும்புவார்கள். இனிமையானவர்கள் மற்றும் கற்பனை திறன் கொண்டவர்கள். இவர்கள் உணர்வு பூர்வமானவர்கள். எதையும் நேர்மையாகவே யோசிப்பார்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். மற்றவர்களுக்கு நல்ல ஆசானாக திகழ்வார்கள். விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே செய்வார்கள்.
12. டிசம்பர் மாதம்:
இவர்கள் சிவனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். கோபம், அமைதி, உறுதி, வலிமை, எளிமை ஆகியவை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரமானவர்கள். இவர்கள் எதையும் எதார்த்தமாக யோசிப்பார்கள்.
நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்.சில நேரங்களில் பொறுப்புகள் குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பார்கள். இவர்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்.