லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Madhu

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Madhu

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை காரணமாக தற்போது வெயில் தாக்கம் தணிந்து காணப்படுகின்றது. 2025 – 26 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதனை தற்போது பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களையும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளை கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அதனால் அறிவுரைகளைப் பின்பற்றி உரிய செயல்பாடுகள் மேற்கொண்டு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பள்ளி தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, மற்றும் ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளில் இருக்கக்கூடிய தளவாடப் பொருட்கள் கதவு மற்றும் ஜன்னல்கள், உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியம்.

மேலும் ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் காலாவதியாகி இருந்தால் முறையாக பதிவேட்டில் பதிவு செய்து அதனை நீக்கம் செய்ய வேண்டும். பள்ளியின் மேற்கூரையில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள சமையலறை, சமையல் பாத்திரங்கள் ஆகியவை நன்கு தூய்மை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் இல்லாமல் தூய்மைப்படுத்துவது அவசியம். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பொறுப்பு என்பதினால் அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்து பேசி தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.