Breaking News, Politics, State

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதல்வர்.. தவெக மேலுள்ள பயத்தை நிரூபித்த பேச்சு!!

Photo of author

By Madhu

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதல்வர்.. தவெக மேலுள்ள பயத்தை நிரூபித்த பேச்சு!!

Madhu

Button

TVK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை எதிர்நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பீகாரை விட தமிழகத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக தமிழகத்தில் ஆளுக்கட்சியாக உள்ள திமுக தனது அரசியல் எதிரி என்று கூறியதிலிருந்தே தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் திமுகவையும், ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து வருகிறார். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் விஜய் பெயரை கூட செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.

அதிலும் திமுக தலைவர் ஸ்டாலின் விஜய்யை புதிய எதிரிகள் என்று மறைமுகமாக பல இடங்களில் விமர்சித்துள்ளார். புதிய கட்சியான தவெகவை பல வருடங்களாக அரசியலில் இருக்கும் திமுக விமர்சிக்க தொடங்கினால் விஜய் அரசியலில் வளர்ச்சி அடைந்து விடுவார் என்ற பயத்தினால் திமுக அவரை நேரடியாக விமர்சிக்காமல் இருக்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக துணை முதல்வர் ஸ்டாலின், ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரி திமுக தான் என்று கூறிய அவர், புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை, ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒவ்வொரு தொண்டனுக்கும் வரலாறு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இவரின் புதிய கட்சி என்ற கருத்து விஜய்யை தான் குறிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். விஜய் எல்லா இடங்களிலும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்து வருகையில், திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும் விஜய்யை மறைமுகமாக சாடுவதற்கு அவர் மேல் உள்ள பயம் தான் காரணம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் பதவியில் அமரும் அண்ணாமலை.. எனக்கு வேலை போகலாம்!! நயினார் சொன்ன ஷாக் நியூஸ்!!

அதிமுக அமைச்சருக்கு எதிராக கிளம்பிய மகளிரணி.. அச்சத்தில் இபிஎஸ்!!