விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

Photo of author

By Janani

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

Janani

விளக்கமாறு என்பதை சாதாரணமா நினைக்காதீர்கள். ஏனென்றால் மகாலட்சுமி தாயார் உடன் தொடர்புடையது தான் இந்த விளக்குமாறு.நமது செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடியவருக்கு தொடர்புடையது அப்படின்னு சொல்றீங்களே அப்படின்னு கேட்டீங்கன்னா.. இது உண்மைதான். இந்த விளக்குமாறுக்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு, பல உண்மைகள் இருக்கு.

பொதுவாக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயார் எங்கெல்லாம் குடி கொள்வார்? அமைதியாக இருக்கின்ற இடத்திலும், சுத்தமாக இருக்கின்ற இடத்திலும் தான் குடி கொள்வார். நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் விளக்குமாரை பயன்படுத்தி தான் சுத்தப்படுத்த முடியும்.

எனவே விளக்குமாறால் மட்டுமே சுத்தமாக வைத்திருக்க முடியும் என்கின்ற காரணத்தினால மகாலட்சுமி தாயாருக்கு பிரியமான பொருட்களுள் விளக்குமாறும் ஒன்றாகி விட்டது. மஞ்சள், குங்குமம், கல் உப்பு இன்னும் பிற பொருள்கள் மகாலட்சுமி தாயாருக்கு எவ்வாறு பிரியமான பொருள்களாக இருக்கின்றதோ அதே போல தாயாருக்கு பிடித்தது இந்த விளக்குமாறு.

இந்த விளக்குமாருக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது இல்லத்தில் சரிவர அதை பயன்படுத்தி சரியான இடத்தில் வைத்தோம் என்றால், நமது வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் படிப்படியாக குறையும். இது நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற உண்மை விளக்கம்.

ஒரு சில வீடுகளுக்கு சென்று பார்க்கும் பொழுது அங்கு விளக்குமாறு எங்கு இருக்கிறது என்று தேடினாலும் நமது கண்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் பகல் நேரங்களில் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு விளக்குமாரை வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நமது பணத்தை எவ்வாறு மறைத்து வைக்கின்றோமோ, அதனைப் போன்று தான் பகல் பொழுதில் விளக்குமாரை மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதவாறு வைக்க வேண்டும்.
முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் முன்வாசலின் வழியாக மகாலட்சுமி தாயார் வருவார்கள் என்று, பின் வாசலின் வழியாக உள்ள கொள்ளை புறத்தில் விளக்குமாரை போட்டு வைப்பார்கள்.

இந்த மகாலட்சுமி தாயார் நமது வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும், பெண்களை அவமதிப்பாக பேசக்கூடாது, சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நமது கடவுள் ஆகிய சீத்தலாதேவி அம்மையார் அவர்கள் தனது கையில் விளக்குமாரை வைத்திருப்பார்கள்.

கடவுளாகிய நமது தெய்வமே கையில் விளக்குமாரை வைத்திருப்பது, விளக்குமாறு என்பது சாதாரணமானது அல்ல, அதனை அவமதிக்காதீர்கள் என்பதை உணர்த்துவது போன்று அந்தத் தாயார் தனது கையில் விளக்குமாறு வைத்திருப்பார்.

எனவே இந்த விளக்குமாரை நமது வீட்டில் கொள்ளை புறம் இருந்தால் கொள்ளைப்புறத்திலும், அல்லது கொள்ளை புறம் இல்லாதவர்கள் வீட்டில் வராண்டா அல்லது சமையலறையில் யாருடைய கண்ணுக்கும் தெரியாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விளக்குமாரை இரவில் தூங்கும் பொழுது நிலை வாசலுக்கு அருகில் வைத்து விட வேண்டும் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஏனென்றால் இரவில் தான் துர் சக்திகள், தீய சக்திகள், தீய ஆன்மாக்கள் போன்றவை நமது வீட்டிற்கு வரும். எனவே அந்த தீய சக்திகள் நமது வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் மட்டும் விளக்குமாரை நிலை வாசலுக்கு அருகில் வைத்து விட வேண்டும்.

அதேபோன்று நமது முன்னோர்கள் குழந்தைகள் தூங்கும் பொழுது அவர்களுக்கு அருகில் இந்த துடைப்பத்தை இரவு நேரங்களில் போட்டு வைப்பார்கள். ஏனென்றால் எந்த ஒரு தீய சக்தியும் குழந்தையை நெருங்கக் கூடாது என்பதற்காக.
துடைப்பம் என்பது கடவுளுடன் ஒப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு பொருள்.

எனவே தான் அது தீய சக்திகளை நமது வீட்டிற்குள் நெருங்க விடாது. எனவே பகல் நேரங்களில் யாருடைய கண்களுக்கும் தெரியாதவாரும், இரவு நேரத்தில் நிலை வாசலுக்கு அருகிலும் வைக்க வேண்டும்.