எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

Photo of author

By Sakthi

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

Sakthi

 

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி…

 

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று அந்த படத்தில் நடித்த பெள்ளி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

 

தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவண திரைப்படத்தை பெண் இயக்குநர் கார்த்தகி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் யானை கண்காணிப்பாளர்களான பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் நடித்தனர். இந்த ஆவண திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

 

இதையடுத்து ஆஸ்கர் விருது வென்ற திரைப்படத்தில் நடித்த பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தது. இந்நிலையில் தமிழக அரசு பெள்ளி அவர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. மேலும் பழங்குடியின தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளியை பார்க்க ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பழங்குடியின தம்பதி பொம்மன் பெள்ளி இருவரையும் காண்பதற்கு பிரதமர் மோடி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்தார். இந்நிலையில் இயக்குநர் எங்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என்று பெள்ளி கூறியுள்ளார்.

 

இயக்குநர் கார்த்தகி உதவி செய்யவில்லை என்பது குறித்து பெள்ளி அவர்கள் “தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்தகி அவர்கள் நாங்கள் போன் செய்தாலும் பேசுவது இல்லை. இயக்குநர் கார்த்தகி எங்களுக்கு வீடு, பணம் போன்ற உதவிகளை செய்வதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்தவொரு உதவியும் செய்யவில்லை. எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அதுவே போதும்” என்று கூறினார்.