அவர்களின் கணிப்பையும் மீறி இந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஸ்ரீதரின் எண்ணத்தை மாற்றி 100 நாள் தாண்டி ஓடிய படம் தான் படிக்காத மேதை.
மாபெரும் வெற்றி இயக்குனராக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் கணிப்பை தவற விடுவது என்பது அறிந்தது மக்களின் மனம் என்னவென்று யாருக்கும் தெரியாது யாரை கொண்டாடுகிறார்கள் இந்த படம் பிடிக்கிறது என்றும் அவருக்கு தெரியாது அதனால் இந்த படத்தில் அவரது கணிப்பு பொய்யாகி இருக்கின்றது.
இந்தப் படம் ஒரு வங்கப்படத்தின் தகவல் இந்த படத்தை பார்த்து ஸ்ரீதருக்கு இந்த படம் ஒத்து வராது என்று தோன்றியிருக்கிறது. அதனால், பீம்சிங் பணித்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம், அப்போது தனது உதவியாளராக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணை பயன்படுத்திக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட பீம்சிங் வங்கப் படத்தை தமிழுக்கு ஏற்றபடி மாற்றி வசனம் எழுதும் பொறுப்பை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். பீம்சிங்கின் ஒத்துழைப்புடன் முழு திரைக்கதையும் தயாரானது.
புது படத்தில் சிவாஜி அவர்கள் வேலைக்காரனாக நடித்திருப்பார். தனது சின்னஞ்சிறு வயதில் இருந்து இந்த வீட்டில் வேலை செய்யும் சிவாஜிக்கு வேலைக்காரன் என்பதையும் தாண்டி இந்த வீடு மிகவும் அவர் மேல் பாசத்துடனும் இருக்கும். அந்த குடும்பம் மீது ஒட்டுதல் இருக்கும். பொருளாதார நெருக்கடியில் அந்தக் குடும்பம் சிக்கும் போது பல்வேறு அவமானங்களையும் கடந்து அவர்களுக்கு உதவி செய்வார். அந்த குடும்பத்தின் தலைவர் இறந்த பிறகும் கூட அவரது மனைவியை அனைவரையும் காப்பாற்றி நிறுத்திப்போன திருமணங்களையும் நடத்தி வைப்பார் ஒரு பொறுப்பான பிள்ளையாக .
கே.வி.மகாதேவனின் இசையில் மருகதாசியும், கண்ணதாசனும் எழுதிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு ஒரு உறுதி. சிவாஜி மற்றும் குடும்பத்தலைவராக நடித்த எஸ்.வி.ரங்கராவ், அவரது மனைவியாக வரும் கண்ணம்பா, சிவாஜியின் மனைவியாக நடித்த சௌகார் ஜானகி என அனைவரும் நடிப்பில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தனர். படம் 100 தினங்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது.
அத்துடன் விசுவாசமான வேலைக்காரன் படத்தை பின்னணியாகக் கொண்ட முத்து எங்கள் சொத்து, வாழ்க்கை, பேர் சொல்லும் பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு முன்னோடியாகவும் இந்தப் படம் அமைந்தது.
ஸ்ரீதரைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களாலும் சிலநேரம் எந்தக் கதை வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் போயிருக்கிறது.
2024 நாளில் இந்த படம் 64 வருடங்களையும் கடந்து இன்றும் பேசப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.