முதல் பாகத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குநர்கள்!!! ஏமாற்றம் தந்த இரண்டாம் பாகம் திரைப்படங்கள்!!!
தமிழ் சினிமாவில் முதலில் வெளியான திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுத்து ஏமாற்றம் அடைந்த இயக்குநர்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் அதிகம் படங்களை எடுத்து பிரபலம் அடைந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். அது போலவே ஓரிரு படங்களை எடுத்து பிரபலமான இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு படம் வெற்றியடைந்த பிறகு அதற்கு இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலரே உள்ளனர்.
இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் படம் வெற்றி பெற்றால் அடுத்த நடிகர், அடுத்த கதை, அடுத்த திரைப்படம் ஏன்று செல்ல வேண்டும். ஆனால் தற்போதைய சினிமா காலகட்டத்தில் தான் இயக்கும் திரைப்படம் வெற்றியடைந்த பிறகு அதற்கு இரண்டாம் பகம் எடுக்கும் பழக்கம் தற்பொழுது உள்ள இயக்குநர்களிடம் அதிகம் காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்த பதிவில் இரண்டாம் பாகம் தியைப்படத்தை எடுத்து ரசிகர்களையும் ஏமாற்றி தானும் ஏமாற்றம் அடைந்த இயக்குநர்களை பற்றி பார்க்கலாம்.
இரண்டாம் பாகம் திரைப்படம் எடுத்து ஏம்மற்றம் அளித்த/அடைந்த இயக்குநர்கள்…
* சி.எஸ் அமுதன்
இயக்குநர் சி.எஸ் அமுதன் 2010ம் ஆண்டு நடிகர் மிர்ச்சி சிவா அவர்களை வைத்து தமிழ் படம் என்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் வெளியான சில படங்களின் சில காட்சிகளை வைத்து புதுமையாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் 8 வருடங்கள் கழிந்து மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழ்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் தமிழ்படம் 2 மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இவர் தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
* விஜய் குமார்
இயக்குநர் விஜய் குமார் 2016ம் ஆண்டு வெளியான உறியடி திரைப்படத்தை இயக்கி அதில் அவரே நடித்து அந்த திரைப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருந்தார். உறியடி திரைப்படம் பிரபலம் அடைந்ததா என்று கேட்டால் தெரியவில்லை. ஆனால் உறியடி திரைப்படத்தில் இருக்கும் பாட்டு ஒன்று மட்டும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இயக்குநர் விஜய் குமார் உறியடி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். உறியடி 2 திரைப்படமும் நினைத்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
* வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் அனைத்திலும் கதை இருக்குமா என்று கேட்டால் கதை இருக்கும். ஆனால் இருக்காது அப்படிதான் ரசிகர்கள் சொல்கின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு தான் இயக்கிய முதல் படமான சென்னை 600048 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சென்னை 600048 தியைப்படத்திற்கு இரண்டாம் பாகத்தை இயக்கினார். முதல் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியான போதிலும் சென்னை 600048 படத்தின் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு தற்பொழுது நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
* இயக்குநர் ராம்பாலா
இயக்குநர் ராம்பாலா அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் தில்லுக் துட்டு திரைப்படத்தை இயக்கினார். தில்லுக்கு துட்டு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தெடர்ந்து தில்லுக் துட்டு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ராம் பாலா அவர்கள் இயக்கினார். ஆனால் தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நினைத்த வரவேற்பும், வெற்றியும் கிடைக்கவில்லை.
* இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் இயக்கத்தில் சாமி திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து இவர் 2018ம் ஆண்டு சாமி ஸ்கொயர் என்று இரண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சரியாக பேசப்படவில்லை.
* இயக்குநர் சமுத்திரக்கனி
நடிகராக அனைவராலும் பார்க்கப்படும் சமுத்திரக்கனி பிரபல இயக்குநரும் ஆவார். இவர் 2009ம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டு வெளியான நாடோடிகள் 2 திரைப்படம் நினைத்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
* இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் சண்டக்கோழி திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
* இயக்குநர் விஜய் மில்டன்
இயக்குநர் விஜய் மில்டன் அவர்கள் 2014ம் ஆண்டு கோலி சோடா திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நினைத்த அளவிற்கு எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை.
* இயக்குநர் அன்பழகன்
இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் நடிப்பில் 2012ம் ஆண்டு சாட்டை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தது. ஆனால் 2016ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான இரண்டாம் பாகமான அடுத்த சாட்டை திரைப்படத்திற்கு நினைத்த வெற்றி கிடைக்கவில்லை.
* இயக்குநர் எ.எல் விஜய்
இயக்குநர் எ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை தமன்னா அவர்களின் நடிப்பில் 2016ம் ஆண்டு தேவி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தேவி 2 திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை.
இன்னும் தமிழ் சினிமாவில் பல இரண்டாம் பாகத் திரைப்படங்கள் வரவுள்ளது. இந்தியன் 2, இன்று நேற்று நாளை 2, சந்திரமுகி 2, சார்பட்டா ரவுண்ட் 2, கைதி 2, சர்தார் 2 என்று மேலும் பல படங்கள் வெளியாகவுள்ளது. இவை அனைத்தும் ரசிகர்களின் கவனம் ஈர்க்குமா அல்லது இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.