DMK CONGRESS VCK: தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக சென்ற முறை தோல்வியடைந்த தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்து கண்காணித்து வருகிறது. மேலும் நான்கரை ஆண்டுகளில் திமுக மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நியாபகப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தனது கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நீண்ட காலமாக திமுக உடன் அங்கம் வகித்த வரும் காங்கிரஸ் விஜய் வருகையை வைத்து திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு வருகிறது. விஜயுடன் இணையும் போக்கை காட்டுவதற்காக காங்கிரஸின் முக்கிய புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது கூட்டணிக்குரிய சந்திப்பாக தான் இருக்கும் என்று அனைவரும் கூற, பிரவீன் சக்கரவர்த்தி இதனை அறவே மறுத்து வந்தார். இந்நிலையில் தான் திமுக அரசுக்கு எதிராக அவர் பதிவிட்டிருந்த கருத்து பரவலானது.
இது குறித்து திமுக கூட்டணி கட்சிகளான விசிகவும், மதிமுகவும் காங்கிரசை கடுமையாக சாடி இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் எங்க உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாமென கூறியிருக்கின்றனர். இவ்வாறு திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதி கொள்வது கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஸ்டாலின் எந்த கருத்தும் கூறாமல் இருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.