கேரளாவில் நடைபெற்ற தமிழக பெண்களுக்கு எதிரான அநியாயத்தை 10 வருடங்களாக வேடிக்கை பார்த்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்! அர்ஜுன் சம்பத் ஆவேசம்!

Photo of author

By Sakthi

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத சொல்லாத ஒன்றை இந்தி திணிப்பு என தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத மற்றும் சொல்லாத ஒன்றை ஹிந்தி திணிப்பு என்று தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றன தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று திமுகவினர் கொண்டாடிய போது தென்காசி அருகே பட்டியலின மக்கள் வாழும் கிராமத்தையே ஒதுக்கி வைத்த சம்பவம் நடந்தது. பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் தர மறுத்த சம்பவம் வீடியோ காட்சிகளாக சமூக ஊடகங்களில் வெளியானது என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தமிழக பெண்களை நரபலி கொடுத்து அறுபது வருட காலமாக வெட்டிப் போட்ட சம்படத்தை கண்டு கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகள் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.

அதோடு ஹிந்தி திரிபு என தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். சாஸ்திரி பவன் முற்றுகை என்று திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் கவனத்தை திசை திருப்பும் செயல் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.