திமுகவிற்கு மொத்தமாக ஆப்பு வைத்த எச். ராஜா!

Photo of author

By Sakthi

2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கின்றது எனவே ராசா ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை தான் பேச இயலும் என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கின்றார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ராஜாவை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது மக்களின் மத்தியில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக இதை செய்து வருகின்றது இது போன்ற செயலை அந்த கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள் அயோக்கியர்கள் முட்டாள்கள் 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது இதனை கருத்தில் கொண்டு ராசா நாவடக்கத்துடன் பேச வேண்டும் அவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை தான் பேச இயலும் திமுக கொள்ளையர்களின் கூடாரம் திமுகவிற்கு சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்று தருவார்கள்.

அதோடு திமுகவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அவர் கட்சி தொடங்கினால் திமுகவிற்கு தான் ஆபத்து அமித்ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை சுயமாக சிந்தனை செய்து கட்சி ஆரம்பிப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்து இருக்கின்றார்.