கடற்கரை போட்டியில் இந்த உடை அணிந்து விளையாடியதால் ஏற்பட்ட விளைவு!
விளையாட்டு போட்டியில் கூட பெண்களுக்கு ஒரு விதிமுறை, ஆண்களுக்கு ஒரு விதிமுறை என்று பாகுபாடு பார்த்து விளையாடுகிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்ய? விளையாட்டு என்றல் ஒரே கெடுபிடிகள், கட்டளைகள் தானே பின்பற்ற வேண்டும். இந்த நாட்டில் பாருங்கள் இதெற்கெல்லாம் இவ்வளவு கெடுபிடிகள் என்று.
பல்கேரியா நாட்டில் ஐரோப்பிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே பெண்கள் பிகினி உடை அணிவதற்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினார். இதற்காக நார்வேயின் பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிக்கு 1500 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு கைப்பந்து கூட்டமைப்பும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நாங்கள் உங்களுக்குப் பின்னால் நின்று உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆடைகளுக்கான விதிகளை மாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதனால் வீரர்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் ஆடைகளில், விளையாட முடியும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ஆபிட் ராஜா இது குறித்து கூறும் போது இது முற்றிலும் அபத்தமானது என்று கூறியுள்ளார். கடற்கரை கைப்பந்து போட்டியின் விதிகள் பெண்கள் டாப்ஸ் மற்றும் பிகினி கீழ் ஆடை அணிய வேண்டும் என்றும், ஆண்கள் டாப்ஸ் மற்றும் ஷார்ட்சை அணியவும் வலியுறுத்துகிறது.
https://pbs.twimg.com/card_img/1417172928182079493/-9x5WXZs?format=jpg&name=small
https://pbs.twimg.com/media/E6zkednWQAMcE_N?format=jpg&name=small