ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு! எப்போது பார்க்கலாம் என தெரியுமா?
விண்வெளியில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது. அது எப்பொழுது வெறும் கண்களால் பார்க்க முடியுமா முடியாதா என்பது குறித்து பார்க்கலாம்.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் புதன், செவ்வாய், பூமி உள்பட இருக்கும் அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்று வட்டாரப் பாதைகளில் சுற்றி வருகின்றது என்பது நமக்கு தெரியும். இந்த கோள்கள் அனைத்தும் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றது.
இந்த சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வந்து சந்திக்கும் நிகழ்வு என்பது எப்பொழுதாவது தான் நடக்கும். அதையும் நாம் வெறும் கண்களால் காணலாம்.
பொதுவாக 3 அல்லது 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்து சந்திக்கும். இதை நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள் சந்திக்கும் நிகழ்வு ஜூன் 3ம் தேதி நடக்கவுள்ளது. அதுவும் ஜூன் 3ம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கிழக்கு திசையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளது.
இந்த நிகழ்வில் புதன், செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளது. இந்த நிகழ்வை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் நாம் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு கோள்களை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
மேலும் மீதமுள்ள யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களை நாம் தொலைநோக்கியை வைத்து பார்க்கலாம். பூமியில் இருந்து இந்த இரண்டு கோள்களும் தொலைவில் இருப்பதால் வெறும் கண்களால் பார்க்க முடியாது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.