விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா…!

0
34
விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி அவர்களின் வழக்கத்திற்கு மாறான நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை பவுனி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கியமான ரோல்லில் நடித்துள்ளனர்.
இளையராஜா அவர்கள் விடுதலை படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் விடுதலை திரைப்படம் ஏற்கனவே இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியானது. அதன்படி விடுதலை 2 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அவர்கள்தான் விடுதலை 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை மஞ்சு வாரியர் ஏற்கனவே இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்திலும் நடிகர் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.