இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தையை 24 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த பாசக்கார தந்தை!

Photo of author

By Sakthi

வளரும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவரும் அந்த நாட்டின் குழந்தை கடத்தல் என்பது மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றன. அதனை தடுப்பதற்கு அந்த நாட்டின் அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த குழந்தை கடத்தல் என்பது தொடர் கதையாகவே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, பலரும் தங்களுடைய குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார்கள். இதில் இரண்டு வயதில் கடத்தப்பட்ட தன்னுடைய மகனை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு தந்தையை மீட்டு நேரில் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. தற்சமயம் உலகம் முழுவதும் இது வைரலாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

சென்ற ஆயிரத்து 1997 ஆம் வருடம் ஷாங்டாங் மாகாணத்தில் சார்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் கடத்தப்பட்டான் இதுகுறித்து புகார் அளித்ததின் கடத்தல்காரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இருந்தாலும் அதற்கு முன்னரே அந்த சிறுவனை விற்று விட்டபடியால் பலகைகள் மாறிய சிறுவனை காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய மகனை அவரே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த அந்த தந்தை தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை வாங்கி ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடி இருக்கின்றார். கையிலிருந்த ஒட்டு மொத்த பணமும் செலவழித்து விட்ட சூழலில் தன்னுடைய பயணத்தைத் தொடர்வதற்கு அவர் பிச்சை எடுத்திருக்கிறார். இந்த பயணத்தின்போது பல முறை விபத்திற்குள்ளாகி அவருடைய எலும்புகள் முறிந்து இருக்கின்றன. வழிப்பறிக் கொள்ளையர்களிடம் பணம் போன்றவற்றை இழந்திருக்கிறார் அந்த தந்தை.

எவ்வளவோ இன்னல்கள் நேர்ந்த போதும் தன்னுடைய தேடலை அவர் நிறுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். அவருடைய இந்த அயராத முயற்சிக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்சமயம் பலன் கிடைத்திருக்கிறது. இரண்டு வயதில் கடத்தப்பட்ட தன்னுடைய மகனை அவர் கண்டுபிடித்து அவனுடன் ஒன்றிணைந்து விட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.