போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ!

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் டிஹெட் மாவட்டம் அக்பர்பூர் நகரில் உள்ள மருத்துவமனை அருகே கைக்குழந்தையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கண்மூடித்தனமாக மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அங்கு தாக்குதலுக்கு உள்ளான நபர் அந்த மருத்துவமனை ஊழியரின் சகோதரர் ஆவார்.

அவர் அங்கு ஊழியராக இருந்து கொண்டு மருத்துவமனை நடவடிக்கைகளில் தொந்தரவு செய்வதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது தனது சகோதரனை கைது செய்ய வேண்டாம் எனக் கூறி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த நபர் போலீசாரையும் தடுக்க முயற்சி செய்தார். அதன் காரணமாக ஆத்திரம் அடைந்த போலீசார் குழந்தையை தோளில் சுமந்தபடி இருந்த அந்த பாசமிகு சகோதரனை லத்தியால் மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

போலீசார் தன்னைத் வெறி கொண்டு அடிக்கும் போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டு விடும் என்றும், இது எனது குழந்தை மேலும் குழந்தைக்கு தாயாக இல்லை என்றும் அந்த நபர் கூறிக் கொண்டு அங்கேயே நின்றார். ஆனால் போலீசார் அவரை விடாமல் தொடர்ந்து தாக்கினர். அதன் பின்னர் குழந்தையை அவரிடம் இருந்து வாங்கும் முயற்சியிலும் ஈடுபட செய்தனர்.

ஆனால் அந்த நபரோ தனது குழந்தையை தோளிலிருந்து இறக்கி விடவே இல்லை. இறுதியில் அந்த நபரை போலீசார் குழந்தையுடனேயே வாகனத்தில் ஏற்றி கொண்டனர். ஆனால் இந்த வீடியோ பரவலாக அதைத் தொடர்ந்து அந்த நபரை கடுமையாக தாக்கிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பார்த்த அனைவருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment