அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்!
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருப்பவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் பழைய மால்டா சமிதியின் உள்ளூர் தலைவராக பதவி வகிக்கிறார். அவர் நேற்று அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரது அதிகாரபூர்வ நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதன் பின்னர் கையில் ஒரு கை துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்தார்.
அதை அங்கிருந்தவர்கள் அவர்களது கேமராக்களின் மூலம் பதிவு செய்து கொண்டனர். அதை எடுத்த சிறிது நேரத்தில் எல்லாம் அவர்கள் இந்த படத்தை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அலுவலகத்திற்குற்கு உள்ளேயே கைத்துப்பாக்கியை வைத்து இருக்கும் இந்த புகைபடம் மிகவும் வைரலாகி வருகிறது. நேற்று இந்த புகைப்படம் வைரலான நிலையில் மண்டல் மாவட்ட அரசியலில் இந்த புகைப்படம் மிகுந்த பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அவர் செய்தது மிகவும் தவறான செயல் என்றும், அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்து துப்பாக்கியுடன் விளையாட கூடாது. இது உண்மையான துப்பாக்கியா? அல்லது பொம்மை துப்பாக்கியா? என போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணேந்து நாராயண் சவுத்ரி கூறும் போது, புகைப்படத்தை பார்க்கும் போது அது உண்மையான துப்பாக்கி போல் தான் தெரிகிறது. இது போன்ற ஒரு சம்பவத்தால் கட்சியின் புகழ் சேர்ந்து கெட்டு விடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.