இறுதியான அதிமுக-அமமுக கூட்டணி.. சஸ்பென்ஸ் உடைத்த டிடிவி தினகரன்.. குஷியில் இபிஎஸ்..

ADMK AMMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி தொண்டர்களும், தேர்தல் ஆணையமும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருகின்றன. ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் ஆட்சியை பிடிக்க போராடி வரும் நிலையில், ஆண்ட கட்சியான அதிமுகவும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்றே சொல்லலாம். இந்த தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தால் அது, அதிமுகவின் 11வது தோல்வியாக பதிவாகிவிடும். இதனால் இந்த தேர்தலில் வெற்றியை பதிவு செய்தே ஆக வேண்டுமென போராடி வரும் அதிமுக, ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது.

பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் அதிமுக உடன் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கபடலாம் என்று இருக்கும் பட்சத்தில், அதிமுக பலவீனமடைந்து வருவது அதற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாறான நிலையில் இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட தினகரன் தனி கட்சி தொடங்கி NDA கூட்டணியில் தொடர்ந்து வந்தார். பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த நிலையில், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி அக்கூட்டணியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இபிஎஸ்யின் துரோகம் வீழ்த்தப்படும், எங்களின் ஒரே குறிக்கோள் இபிஎஸ்யை தோற்கடிப்பது தான் என்று கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனால் தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லையென்று நினைத்த சமயத்தில், தற்போது அவர் கூறிய கருத்து அரசியல் அரங்கை ஆட்டம் காண வைத்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது, தேர்தல் நேரத்தில் எதிரி யார், துரோகி யார் என்று பார்க்க தேவையில்லை, மக்கள் நலனே முக்கியம் என்று கூறியுள்ளார். எதிரியுடன் கூட்டணி அமைக்கலாம், ஆனால் துரோகியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று கூறி வந்த இவர், தற்போது இவ்வாறான கருத்தை கூறியிருப்பது அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் அதிமுக-அமமுக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.