ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு!
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வகையில் உலகில் முதன் முறையாக பேருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து நாடு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது.
உலகத்தில் ஏற்கனவே ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முதன் முறையாக உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஓட்டுநர் இல்லாத வகையில் ஓடும் பேருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது ஸ்காட்லாந்து. இந்த பேருந்து சென்சார் முறையில் இயங்கும் வகையில் இந்த பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லாமல் சென்சார் முறையில் இயங்கும் இந்த பேருந்து ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் உலகில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இந்த பேருந்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று ஸ்காட்லாந்து அரசு அறிவித்துள்ளது.