தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!
அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும் பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் பிறகு சைக்கிள்களில் சென்றுதான் தபால்களை வினியோகம் செய்தனர். தற்போது தபால் ஊழியர்கள் தபால்களை இருசக்கர வாகனங்கள் மூலமும் தந்து வருகின்றனர். அவர்களும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு தபால் நிலையத்தில் ஊழியர்களுக்காக தபால்களை விநியோகம் செய்ய புதிய அறிமுகமாக எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் துணை தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தபால் நிலையத்தில் பணியாற்றும் தபால் ஊழியர்களுக்கு தபால்களை வீடு வீடாக விநியோகம் செய்ய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. இது குறித்து அந்த தபால் நிலையத்தின் தலைமை தபால் அதிகாரி தாஸ் கூறும்போது, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 14 ம் தேதி முதல் தபால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும், இதையடுத்து எங்களது ஊழியர்களுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை வாங்கி கொடுத்து உள்ளோம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை தினமும் சார்ஜ் செய்ய வேண்டும். இதற்காக தபால் நிலையத்தின் ஒரு பகுதியில் சார்ஜிங் மையமும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். அதுவும் நாட்டிலேயே முதல் முறையாக இங்குதான் ஊழியர்களுக்கு, தபால்களை கொண்டு சேர்க்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.