பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

0
117
The First Minister is involved in the Bitcoin scandal! Suspicious opposition leader!
The First Minister is involved in the Bitcoin scandal! Suspicious opposition leader!

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

தற்போது நம் நாட்டில் கையில் பணமாக இல்லாத பிட்காயின் முறை பல தரப்பினரிடையேயும் மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. ரூபாயே அல்லாத இதை நாம் வைப்பு நிதியாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இந்த பணமானது கையில் இல்லாமல் உள்ள ஒரு பணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்த ரூபாயை அரசு அங்கீகரிக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை காட்டிலும் இதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் பெங்களூருவில் எதிர்கட்சி தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த முறைகேட்டில் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர்கள் கூறுகின்றனர். கட்சிகளை தாண்டி இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யார்? யார்?  என்பதையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

காங்கிரஸுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் யார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை தானே? அரசை வழி நடத்துபவர்கள் யார்? போலீஸ் அரசின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. விசாரணை அமைப்புகள் கூட அரசின் கட்டுப்பாட்டில் தானே செயல்படுகின்றன என்று சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கருத்துகளை கேட்கும்போது அவர் மீது எனக்கு சந்தேகம் தான் ஏற்படுகிறது. இதில் அவர் நேரிடையாக சிக்கிக் கொண்டது போல் அவர் பேசுகிறார். இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று நான் கூறவில்லை. ஆனால் அவர் பொறுப்பான முறையில் பொதுமக்களுக்கு தனது கருத்துக்களை கூற வேண்டும். மேலும் தப்பிக்கும் வகையில் பேசக் கூடாது என்று தான் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கூறுகிறது. நாங்கள் எதற்காக அதைச் சொல்லவேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் தானே? அதை வெளிக்கொண்டு வரவேண்டும். நேரம் வரும்போது நான் அந்த விவரங்களை கண்டிப்பாக வெளியிடுவேன். மேலும் அவர்களது பெயர்களை உங்களால் வெளியிட முடியவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறி விடுங்கள்.

நாங்கள் அதை பகிரங்கப் படுத்திக் கொள்கிறோம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து கிராம வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த முறைகேட்டில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையாவும் விரும்பினால் அதில் தொடர்புடையவர்கள் ஒருவரின் பெயரையாவது அவர்கள் வெளியிட வேண்டும் என்றும் இதில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு இருப்பதாக அவர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleவட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
Next articleஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!