விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள்.
தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். இத்தனை மாதங்களாக முன்னோர் வழிபாடுகளை அமாவாசை நாட்களில் செய்ய தவறியவர்கள், இந்த ஒரு நாள் மட்டும் இந்த ஒரு தீப வழிபாட்டை செய்து பாருங்கள் கண்டிப்பாக முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கண்டிப்பாக தேவை. இவர்களது ஆசி ஒரு குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்றால், அந்த குடும்பம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகளை சரி செய்ய என்ன தான் முயற்சி செய்தாலும் அதற்கான வழி பிறக்காது.
எனவே குலதெய்வத்தின் அருளையும், நமது முன்னோர்களின் அருளையும் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான வழிபாடுகளை சரியாக செய்து வந்தோம் என்றால் நிச்சயம் அவர்களது ஆசியை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட வழிபாடுகளுள் ஒன்று தான் நாளை வரக்கூடிய அமாவாசை நாள் அன்று ஏற்றக்கூடிய இந்த தீப வழிபாடு.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படுவதில் தடைகள், பண வரவில் தடைகள், குடும்பம் முன்னேற்ற தடைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணம் நாம் இந்த முன்னோர் வழிபாடுகளை தவிர்ப்பதால் தான். எனவே மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களை மறவாமல் கண்டிப்பாக வணங்க வேண்டும்.
முன்னோர்களின் அருளும், குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைத்துவிட்டால் போதும் எந்த ஒரு பிரச்சனையும் நம்மை எளிதில் நெருங்காது. ஏனென்றால் மற்ற தெய்வங்களை காட்டிலும், இந்த இரண்டு தெய்வங்களின் அருள் தான் ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு தெய்வங்களின் அருள் ஒரு குடும்பத்திற்கு இருந்தால் மட்டுமே, மற்ற தெய்வங்களும் அந்த குடும்பத்திற்கு அருள் புரியும்.
ஒரு சில குடும்பங்கள் மட்டுமே மாதம் மாதம் அவர்களது முன்னோர்களை மறவாமல் படையல் வைத்து வழிபட்டு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த பழக்கங்களை வைத்திருப்பது இல்லை. அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் இந்த ஒரு தீபத்தை வருடத்தின் முதல் அமாவாசை நாளான நாளைய தினம் ஏற்றினால், அவர்களது குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.
அமாவாசை நாள் இரவு 7:00 மணி முதல் 12 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஒரு தீபத்தை ஏற்றிக் கொள்ளலாம். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு அருகில் ஒரு டம்ளர் அல்லது நிறை சொம்பு தண்ணீர் வைக்க வேண்டும்.
அமாவாசை அதிகாலையில் நமது முன்னோர்களை வரவேற்று படையல் வைப்போம். அதேபோன்று அன்று இரவு அவர்கள் பூலோகத்தை விட்டு செல்லும் பொழுது அவர்களுக்கான ஒரு ஒளியாக இந்த ஒரு தீபத்தையும், அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரையும் வைத்து அவர்களை வழி அனுப்ப வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து, உங்களது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை உங்களது முன்னோர்களிடம் கூறி வேண்டிக் கொள்ளலாம்.
இந்த தீபம் ஒரு அரை மணி நேரம் எரிந்தால் போதும். அடுத்த நாள் காலை அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம். இந்த தீபத்தை தூங்க செல்வதற்கு முன்பு தான் ஏற்ற வேண்டும். இது போன்ற தீப வழிபாட்டை இந்த ஒரு மாதம் மட்டும் அல்லாமல் மாதந்தோறும் ஏற்றி வழிபாடு செய்யலாம். இதனால் நமது முன்னோர்களின் மனம் குளிர்ந்து அவர்களது ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.