விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம்.
எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் செய்யும் பொழுது அதனுடைய பலன் என்பது முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை செய்து பலனடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
மூலிகை செடிகளுக்கு ஒரு அற்புதமான சக்திகள் இருக்கிறது. எனவே அந்த மூலிகை செடி, வேர், இலைகள், பூ ஆகியவற்றை கொண்டு செய்யக்கூடிய பரிகாரங்கள் நிச்சயம் அதீத பலன்களை கொடுக்கக் கூடியது. அதேபோன்று இந்த பரிகாரத்தை செய்வதற்கு நம்பிக்கை என்பதும் மிகவும் அவசியம்.
வெற்றிலை, மருதாணி இலை, செம்பருத்தி பூ இது போன்ற செடிகள் தாந்த்ரீக முறைகளுக்கு எவ்வாறு பயன்படுகிறதோ, அதே போன்று தான் இந்த ஒரு மூலிகையும். ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக்கூடியது. அதேபோன்றுதான் இந்த குப்பைமேனி செடியின் வேரும் அதீத சக்தியை கொண்டது.
இந்த வேருக்கு வசிய சக்தி என்பது அதிகம். தன வசியம், பண வசியம் போன்ற அனைத்தையும் இந்த ஒரு வேர் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த வேரினை கத்தி போன்ற இரும்பு பொருட்களைக் கொண்டு தோண்டி எடுக்காமல், கற்களை கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.
இவ்வாறு வேரினை எடுத்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிழலிலேயே காய வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த வேருக்கு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் சிறிதளவு கசகசா, 101 ரூபாய் பணம் மற்றும் இந்த வேரினைபோட்டு மூடி வைத்துவிட வேண்டும். இதனை பூஜை அறையில் வைப்பது நல்லது.
வாரந்தோறும் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது இந்த பேருக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும் இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும் , பண வரவு அதிகரிக்கும், நேர்மறை சக்திகள் அதிகரிக்கும், கண் திருஷ்டிகள் விலகும், வீட்டில் உள்ளோரின் உடல்நலம் மேம்படும். இந்த குப்பைமேனி வேருக்கு அவ்வளவு சக்திகள் உள்ளது.
இந்த வேரினை நீங்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் மற்றும் வீட்டின் நிலை வாசலில் ஒரு நூல் கொண்டு கட்டி தொங்க விடலாம். இந்த வேரினை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக். கொள்ளலாம். முடியாதவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். அந்த டப்பாவில் இருக்கும் கசகசா மற்றும் பணம் அப்படியே இருக்கட்டும், அந்த வேரினை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்.