வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இந்த சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? என்பது குறித்து தற்போது காண்போம்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் இந்த சூரிய கிரகணம் உருவாகிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் பொழுது ஏற்படக்கூடிய ஒரு வானியல் நிகழ்வு ஆகும். இந்த நேரத்தில் பூமியின் சில பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படும்.
எனினும் சூரியன் உடன் ஒப்பிடும் பொழுது நிலவு சிறியது என்பதால் நிலவால் சூரியனை மறைக்க முடியாது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்பொழுது நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோன்றும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது மார்ச் 29 ஆம் தேதி நிகழவிருக்கிறது.
இந்த கிரகணம் பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும். இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணமானது மாலை 4 :17 மணிக்கு உச்சத்தை அடையும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து இந்த சூரிய கிரகணம் தெரியும். ஆனால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. இது விழித்திரை, தீக்காயங்கள் மற்றும் மீள முடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும்.
இந்த வருடம் இரண்டு சூரிய கிரகணம் நிகழும் எனவும், முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதியும், இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் மீனம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் மூன்று ராசிகளுக்கு பல்வேறு பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏற்படலாம் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம், கடகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் அனைத்து விதத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
கிரகணத்தின் பொழுது நமக்கு பிடித்த கடவுளை நினைத்து ஜபம் மற்றும் தியானங்களை செய்யலாம். கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி, அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வரலாம்.
கிரகணம் நடைபெறும் பொழுது கிரகணத்தின் அலைகள் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. கிரகணத்தின் பொழுது சமைக்கவும் கூடாது சாப்பிடவும் கூடாது.
கிரகணம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், கிரகணம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பின்பாகவும் தான் உணவை உண்ண வேண்டும். கிரகண நேரத்தின் பொழுது கர்ப்பிணி பெண்கள் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை தொடவோ அல்லது கையில் வைத்திருக்கவோ கூடாது.