சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு!!

Sakthi

 

சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு…

 

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர்.பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது உருவாகி வருகின்றது.

 

சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குநர் பி வாசு இயக்க நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஸ்டி தாங்கே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இதையடுத்து இன்று இசையமைப்பாளர் கீராவாணி இசையமைத்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

அதன்படி சந்திரமுகி 2 திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான “ஸ்வகத்தாஞ்சலி” என்ற பாடல் இன்று(ஆகஸ்ட்11) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.