வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

0
8

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பணத்திற்காக மட்டுமே தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக செலவழிக்க கூடாது, என்பதில் அக்கறை காட்டுபவர்களும் உள்ளனர். அதே சமயம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் தனக்கு வேண்டிய செலவினை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும், என நினைத்து அதிகமாக வீண் செலவுகளை செய்பவர்களும் உள்ளனர்.

அதாவது சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுவார்கள் என்றும், ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. மேஷம் :
செலவு செய்வதற்கு முன்பு சிந்திக்கும் வழக்கம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க அஞ்சாதவர்கள். திடீர் செலவுகளை பற்றி புரிந்தும் கவலைப்படாதவர்கள். இருப்பினும் இவர்கள் கொஞ்சம் யோசித்து திட்டமிட்டு செலவு செய்தால், நிதி நிலையை மேம்படுத்தி, நிலைமையை கட்டுப்படுத்த முடியும்.

2. மிதுனம் :
புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதற்காக பணத்தை செலவு செய்ய தயங்காதவர்கள். அது ஆடைகளுக்காக இருக்கலாம். அல்லது புதிய கேட்ஜெட்டுகளை வாங்கி குவிப்பதில் இருக்கலாம். பணத்தை வாரி இறைப்பதை கட்டுப்படுத்தினால், கடன் தொல்லை இல்லாமல் வாழலாம்.

3. சிம்மம் :
ஆடம்பரத்தையும் அந்தஸ்தையும் பெருமையும் காட்டிக்கொள்ள, பணத்தை வாரி இறைக்க தயங்காதவர்கள். தன்னுடைய நிலைமை மீறி செலவு செய்து, தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள நினைப்பார்கள். இந்த மனநிலையில் இருந்து அவர்கள் வெளி வந்தால், அவர்கள் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேறலாம்.

4. துலாம் :
வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். அதற்காக செலவு செய்ய தயங்காதவர்கள். கலைப் பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை வாங்கி குவிப்பார்கள். பட்ஜெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

5. தனுசு :
சேமிப்பை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல. இன்றைய தினம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், பொழுதுபோக்கிற்கும் ஆடம்பரத்திற்கும் அதிகம் செலவழிப்பார்கள். நிதியை கொஞ்சம் திட்டமிட்டு செலவு செய்தால், கடன் தொல்லைகளை தவிர்ப்பதோடு, நிதி நிலைமையும் முன்னேறும்.

Previous article1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!
Next articleபல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??