ஒரு எம்.எல்.ஏ ரயிலில் செய்த முகம் சுளிக்கும் செயல்! உள்ளாடையுடன் அலைந்த அவலம்!
பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் என்பவரும் பயணம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் இந்த எம்.எல்.ஏ. இவர் ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரயிலில் வந்த பயணிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இவ்வாறு நடந்துள்ளது.
அந்த எம்.எல்.ஏ.வின் செயலுக்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தலையிட்டு பிரச்னைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்தில் பிரகலாத் பாஸ்வான் என்பவர் எம்.எல்.ஏ. குறித்து ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் எம்.எல்.ஏ வெள்ளை பனியன் மற்றும் உள்ளாடையுடன் சுற்றும் போது குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் அவர் என் தங்க மோதிரத்தையும், செயினையும் பறித்து என்னிடம் ஒரு வாறு நடந்துகொண்டார் எனவும் கூறியுள்ளார். இது பற்றி அந்த எம்.எல்.ஏ விடம் விசாரணை மேற்கொண்டு உள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்த உள்ளாடையுடன் திரிந்த எம்.எல்.ஏ, இது பற்றி தெரிவிக்கும் போது தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததன் காரணமாகவே உள்ளாடையுடன் இருந்ததாகவும், ரயிலில் ஏறிய உடனேயே எனக்கு இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்றும், நான் பொய் கூறவில்லை. அதனால்தான் நான் அப்படி இருந்தேன் எனவும் கூறியுள்ளார். அவர் உள்ளாடையுடன், அதுவும் சட்டப்பேரவை உறுப்பினரின் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருவதும் குறிப்பிடத் தக்கது.