இளம் பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்! அதிரடியாக களமிறங்கி மீட்ட காவல்துறையினர்!

0
141

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டு தெருவை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க என்பவர் மயிலாடுதுறையில் இருக்கின்ற பாட்டி வீட்டில் தங்கி இருக்கும் போது பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததன் காரணமாக, அவருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் அனுமதியின்றி அந்த பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு வழங்கியிருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாக தெரிவித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மயிலாடுதுறையில் 2 முறை காவல் நிலையத்தில் புகார் வழங்கிய சூழ்நிலையில், காவல்துறையினர் இனி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யகூடாது என்று விக்னேஸ்வரனிடம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 12ஆம் தேதி விக்னேஸ்வரன் அந்த பெண்ணை கடத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரிடமிருந்து தப்பிச்சென்ற இளம்பெண் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பைக் மற்றும் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வருகை தந்த விக்னேஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போயிற்று.

இது தொடர்பாக தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை காவல்துறை கண்காணிப்பாளர் வசந்த்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இளம் பெண் மீட்கப்பட்டார்.

அதோடு இளம் பெண்ணை கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு புகுந்து இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleகாதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!
Next article9ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! காரணம் என்ன?