விமான விபத்தில் தப்பி பிழைத்த சிறுமி! சிறுமி கூறிய நெகிழ்ச்சியான காரணம்!
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் உள்ள பீவர் தீவை சேர்ந்த ஒரு தம்பதிகள் அவர்களது செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி தனி விமானம் மூலம் கால்நடை மருத்துவமனைக்கு ஆயத்தமாகினர். அப்போது அவர்களுடன் மைக் பெர்டியூ என்பவரும் அவரது 11 வயது மகள் லேனி பேர்டியூவும் சேர்ந்து விமானத்தில் பயணித்தனர்.
இந்த விமானம் பீவர் தீவில் உள்ள வோல்கே விமான நிலையத்தில் தரை இறங்கிய போது, சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அந்த தம்பதி மற்றும் அவர்களுடன் பயணித்த சிறுமியின் தந்தை மற்றும் விமானி என நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் அந்தத் தம்பதியினர் வளர்த்த செல்லப்பிராணிகளாக நாய்களும் அந்த விபத்தில் உயிரிழந்து விட்டன.
ஆனால் அந்த விபத்தில் 11 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். அவள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இருந்த போதும் உடனடியாக எந்த காரணமும் தெரியவில்லை.
மேலும் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி தற்போது நலமாக இருப்பதாகவும், பூரண குணம் அடைந்து உடல் தேறி வர இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது சிறுமி தனது தாயிடம் விபத்து ஏற்பட்டபோது கடைசியாக தனது தந்தை தன்னை விபத்து நடந்த கடைசி நிமிடங்களில் அணைத்துக்கொண்டு காயம் அடையாமல் காப்பாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார். இதை அவர் தாய் கூறி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.