கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!

0
136
The girl who went to cricket training with desire! But the atrocities that took place there!
The girl who went to cricket training with desire! But the atrocities that took place there!

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!

புதுச்சேரியில் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சோரப்பட்டை பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகிறார்கள். இது பற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதன் பின்னர் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கு சென்றாலும் பாலியல் சீண்டல் என்றால் பெண் பிள்ளைகள் எங்குதான் போவார்கள். அது என்ன அப்படி யாரை பார்த்தாலும் இந்த மாறி எண்ணங்கள் தோன்றி விடுமா? இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள். இவர்களது வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்களையும் வெளியில் இப்படி பார்த்தால், அதாவது இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இவர்கள் என்ன செய்வார்கள்.

Previous articleதுரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!
Next articleமனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!