நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!

0
123
The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!
The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!

திருமணம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது. அது காதல் திருமணமாகட்டும் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஆகட்டும். ஏதாவது ஒரு சர்ச்சையில் தான் ஓடுகிறது. அப்படி ஒரு காதல் ஜோடி தான்  தன் மனைவி செல்போனில் நண்பர்களுடன் பேசியதால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சின்ன பகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். 38 வயதான இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் பணியாற்றிய மும்பையை சேர்ந்த ஜெர்சி பிரின்ஸ்லா என்ற முப்பத்தி ஒரு வயது பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு புதுச்சேரி அருகே தனக்கோடி நகர் முதல் குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து குடியேறனார்கள்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் ஜெயசுகர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மனைவி வீட்டில் இருந்து வந்த நிலையில் தனது நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், அதன் காரணமாக அவரிடம் சதா சண்டையிட்டு வந்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மனைவியை ஜெயசங்கர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடலூர் நத்தவேளியை சேர்ந்த ராமு என்கிற ராமமூர்த்தி (24), கடலூர் வண்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்கிற முத்துராஜ் (38) கொலையை மறைக்க உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து ஜெய்சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை ஒட்டி நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அந்த தீர்ப்பில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்தை மறைக்க உதவிய அவரது நண்பர்களான மற்ற இரண்டு பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சார்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleநகைக்கடன் தள்ளுபடி, வெளியான அதிரடி அறிவிப்பு……..
Next articleமாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!