அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!

0
80
The goat that went into the office! Take the key sources like foliage and go shock!
The goat that went into the office! Take the key sources like foliage and go shock!

அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஷவுக்பிபூர் என்ற பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு வெளியில் அருகிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கு வைத்திருந்த ஆவணங்களை  அசால்டாக வாயில் கவ்விக் கொண்டது. அலுவலகத்திற்குள் இருந்த ஆட்டை பார்த்த ஊழியர்கள் அதைப் பார்த்ததும் அதிர்ந்து போய் அதை விரட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஆடோ  அந்த ஆவணங்களை தனது வாயில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டது.

உடனே அந்த அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும், அதை விடாமல் துரத்தியும் கூட அதை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த ஆடு அப்படி வேகமாக ஓடினால் கூட அந்த ஆவணங்களை கீழே போடாமல் அதுவே மென்று தின்று விட்டது. அதன் பிறகு அதை கீழேயும் துப்பி விட்டது. அந்த ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அது முழுவதுமாக சேதமடைந்து இருந்ததை பார்த்து வேதனை தெரிவித்தனர்.

அதன் காரணமாக அவர்கள் மிகவும் அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும் அந்த ஆடு அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை தூக்கிச் செல்வதை சிலர் வீடியோ மூலம் பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.