தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு!

Photo of author

By Hasini

தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு!

Hasini

The government has arranged 4000 special buses due to Tasara!

தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு!

பெண் தெய்வங்களான பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி முதலான முக்கிய மூன்று தெய்வங்களை நாம் சிறப்பாக கொண்டாடும் ஒரு திரு விழாதான் நவராத்திரி. இதில் பத்து நாட்கள் அனைத்து கோவில்களிலும் இதை சிறப்பாக கொண்டாடுவார்கள். அதே தசரா என்பது பத்து நாட்கள் நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி ஆகும்.

ஆனாலும்  இந்தியாவில் இது அதிக அளவு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. அதன்  காரணமாக விழாவை முன்னிட்டு பேருந்துகளில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி அரசு பல பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக இயக்க உள்ளது. அதன்படி அதன் விவரங்கள் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் அரசு போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது. இதன்படி நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது பற்றிக் போக்குவரத்து மண்டல மேலாளர் வெங்கண்ணா கூறும் போது, மகாத்மா காந்தி பேருந்து நிலையம், ஜூபிளி மற்றும் பிற பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளார்.

பொதுமக்களின் வசதிக்காக காலணி மற்றும் கல்வி நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தசராவின் ஒன்பது நாட்கள் முழுவதும் அவற்றை நாங்கள் இந்த வசதியை அளிக்க உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.