இலவசப் பயணச் சீட்டில் மாற்றத்தை கொண்டு வந்த அரசு!

0
169

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் பயணச் சீட்டில் ஒரு வித மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.

போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றினர்.

சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காணமுடியாமல் எல்லாம் பஸ்களில் ஏறி விடுகின்றனர். எங்களுக்கு இலவசம் தானே என்று நடத்துனரிடம் சண்டை போடுவதால் பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் நிறத்தை மாற்றினர்.

இப்பொழுது அரசு பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் முறையில் ஒரு சில மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது போன்றே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் தங்களுக்கும் இலவச பயணம் அறிவிக்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை வைத்ததால் அவர்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது.

பேருந்து இலவச பயணம் என்றாலும் அனைவர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த டிக்கட்டில் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் அந்த பயணச் சீட்டில் மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அந்த பயணச்சீட்டுக்கு மிகவும் எதிர்ப்பாக அனைவரும் போராடி வந்தனர். மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட பட்டதால் அதற்கு மாபெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு திருநங்கைகள் என அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டு கொடுக்கப்படுகின்றது.

ஜூலை 5-ஆம் தேதி முதல் மாநகர மற்றும் நகரப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதையடுத்து, சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை, விழுப்புரம் கோட்ட பஸ்களிலும், திருநங்கையர் டிக்கெட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Previous articleநாளை முதல் செயல்படும்- அதிரடி அறிவிப்பு!
Next articleஊடகங்கள் தர்மம் காக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் பாய்ச்சல்!