போருக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஹெலிகாப்டரின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்!

Photo of author

By Pavithra

இந்திய சீன எல்லை பிரச்சனையின் காரணமாக தற்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து நவீன ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க உள்ளது. இந்த ஹெலிகாப்டரின் பெயர் AH-64Apache என்பதாகும்.

இந்த அப்பாச்சி 64 ஹெலிகாப்டரின் ஒரு சிறிய வரலாறு :
1986ஆம் ஆண்டு இந்த அப்பாச்சி 64 ஹெலிகாப்டர் ராணுவ பயன்பாட்டிற்கு வந்தது.இதனை அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேல்,நெதர்லாந்து, ஜப்பான், அரேபியா, எகிப்து உள்ளிட்ட 7 நாடுகளும் அப்பாச்சி 64 ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பனாமா, ஆப்கானிஸ்தான் ஈராக் லெபனான் போன்ற நாடுகளுக்கு இடையே நடந்த போர்களில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவகளுக்கு இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் ஆனது பெரும் பலத்தை சேர்த்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரில் பிரிட்டனுக்கு பெரும் பலமாக இந்த அப்பாச்சி இந்த ஹெலிகாப்டர்தான்.

தற்போது இதனை இந்தியாவும் வாங்க உள்ளது.இவ்வளவு சிறப்புமிக்க ஹெலிகாப்டரை வடிவமைத்தது விமான தயாரிப்பிருக்கு பெயர்பெற்ற போயிங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாச்சி 64 ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்!!

இதில் அதிவேகமாக சுழலும் நான்கு பிளேடுகள் மற்றும் இரண்டு எஞ்சின்கள் உள்ளன.

தாக்க வேண்டிய இலக்கை துல்லியமாகத் தாக்குவதற்கு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் மிகத்துல்லியமாக காட்சிகளை காண்பதற்கு தொலைநோக்கி, ஹெலிகாப்டரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

தரையிறங்கும் சக்கரங்களுக்கு இடையே நவீன துப்பாக்கி,hellfire ஏவுகணைகளை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கவும் மற்றொருவர் ஆயுதங்களை பயன்படுத்தி இலக்கை தாக்கும் பணியில் ஈடுபடும் வகையில் மொத்தமாக இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர்கள் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அவர்கள் குறி பார்த்து சுடுவதற்கு தேவையான காட்சிகளைக் காட்டும் தொலைநோக்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

தலையசைபை புரிந்துகொண்டு இலக்கை சரியாக வைக்கும் அளவிற்கு வெளிப்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் ஆனது 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இதில் தொடர்ந்து 200 குண்டுகளை சுடும் வலிமை மிக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.